நளவெண்பா

நளவெண்பா

மிழ் கூறும் நல்லுலகத்தில் உலவும் காவியங்கள் பல.அவை ‘கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப ‘ச் சுவை மல்கும் காவியங்கள், இறவாத புகழுடையன; பிறனாட்டு நல்லறிஞர் பேணிப் புகழுந்தகையன; இயற்கையையும் செயற்கையையும் செப்புவன.அக்காவியங்களில் ஒன்றே ‘நளவெண்பா’ என்னும் நூல்.ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தண்டமிழ்ப் புலவர் புகழேந்தியார் பாடிய இன்னூலுள் ஒவ்வொரு பாவும் படித்துப் படித்து நினைத்து நினைத்துச் சுவைத்தின்புறத் தக்கது.

இன்னூல் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். புகழேந்தியாரும் தம் நூலைச் ‘ சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம் , கலி நீங்கு காண்டம் ‘ என முக்காண்டமாக்கி மொழிவாராயினார்.’காண்டம்’ என்பது நூலிலின் பெரும்பகுதியைக் குறிப்பதாகும்.

முதற்காண்டமாகிய சுயம்வர காண்டம் இன்பச்சுவை பொதிந்து விளங்குவது; இரண்டாவது காண்டமாகிய கலிதொடர் காண்டம் அவலச் சுவை அமைந்தது; மூன்றாவது காண்டமாகிய கலி நீங்கு காண்டம் எனும் பகுதியில் இன்பமும் துன்பமும் கலந்துள்ள நிலையைக் காண்கின்றோம்.

முதற்காண்டம் தமயந்தி எனும் தையலாள் தானே கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுகின்ற செய்தியைக் கூறலின் , ‘சுயம்வர காண்ட ‘ மாயிற்று . தமயந்தி தேவர்க்கு மாலையிடாததால் சினந்த கலி, நளனையும் தமயந்தியையும் தொடர்ந்து துன்பம் விளைவிக்கின்ற பகுதியாதலின், ‘கலி தொடர் காண்டம்’ மாகிறது. மூன்றாம் காண்டம் ‘ கலி நீங்கு காண்டம்’ தொடர்ந்த கலி நீங்குவதை தெரிவிப்பதாகும்.

காட்டில் நாடு முதலியவற்றைத் துறந்த தருமர் வருந்துகிறார் . அங்கே வந்த வியாசர் , தருமருக்குத் தேறுதல் கூறுகிறார். அப்போது அவர் சொல்வதாக இக்கதை தொடங்குகிறது.  

சுயம்வர காண்டம்

கலிதொடர் காண்டம்

கலி நீங்கு காண்டம்

 

 

 

 

 

 
Advertisements%d bloggers like this: